வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 மே 2023 (17:31 IST)

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.10,725 கோடி அபராதம்...

Meta
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ரூ.10,725 கோடி அபராதம் விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பேஸ்புக் என்ற சமூக வலைதள ஊடகத்தை பலகோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

இந்த பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்கள் கோடிக்கணக்கில்  உள்ள நிலையில், இந்த நிறுவனம்  அவர்களின் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி, பயனர்களின் தகவல்களை அமெரிக்க நாட்டிற்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில், பரிமாற்ற விதிமுறைகளை மீறியதாக, பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் ( இந்திய ரூபாயில் ரூ.10725 கோடி) ஐரோப்பிய  ஒன்றியம் அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

’’இந்த வழக்கில் தாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக’’ மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.