1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (16:22 IST)

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

Rishi
பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
 
பிரிட்டன் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தொழிலாளர் கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து:
 
PM Modi oath
இந்நிலையில் கெயிர் ஸ்டார்மருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,   பிரிட்டன் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு மனமார்த்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.  
 
பரஸ்பர வளர்ச்சியையும். இந்தியா - பிரிட்டன் இடையில் அனைத்து துறைகளிலும் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பலப்படுத்த ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 
ரிஷி சுனக்கிற்கும் நன்றி:
 
பிரிட்டனில் பதவி விலகிய ரிஷி சுனக்கிற்கு மோடி வெளியிட்ட பதிவில், பிரிட்டனில் சிறந்த தலைமை பண்புக்காகவும், பதவிக்காலத்தில் இந்தியா பிரிட்டன் இடையிலான உறவை பலப்படுத்த ஆற்றிய பணிக்காகவும் ரிஷி சுனக்கிற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  சிறந்த எதிர்காலத்திற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.