மோடிக்கு நன்றி தெரிவித்த பாடகி ரிஹானா நாட்டின் பிரதமர்!
மோடிக்கு நன்றி தெரிவித்த பாடகி ரிஹானா நாட்டின் பிரதமர்!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாடகி ரிஹானா ஆதரவு கொடுத்து உள்ள நிலையில் அவருடைய நாட்டின் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் குரல் கொடுத்தவர் பாடகி ரிஹானா. அவருடைய ஒரே ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிஹானாவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள பிரபலங்களும் டுவிட் செய்ததால் சர்ச்சைகளும் ஏற்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் ரிஹானாவின் சொந்த நாடான பார்படாஸ் என்ற நாட்டிற்கு இந்தியா கோவிட் 19 தடுப்பூசியை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் தங்கள் நாட்டிற்கு கோவிட் தடுப்பூசி அனுப்பிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பார்படாஸ் நாட்டின் பிரதமர் இந்திய பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்
பாடகி ரிஹானா இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவருடைய நாட்டின் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது