வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (10:40 IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

repo
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி சற்று முன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெற்றத அடுத்து இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியானது. 
 
ஏற்கனவே அமெரிக்காவில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டடை அடுத்து இங்கிலாந்து உள்பட ஒரு சில நாடுகளிலும் ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டதால், இந்தியாவிலும் உயர்த்தப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்தனர்.
 
ஆனால் சற்று முன் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் 6.5 என தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து லோன் வாங்கிய பல பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி மாற்றம் ஏற்பட்டால் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்றும் அதனால் லோன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran