அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு? விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு!
அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன் தொகை எவ்வளவு என்ற விபரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதானி நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது என்பதும் அதானி குழுமத்தில் உள்ள ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் 25% அதிகமாக குறைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து உலகப் பட்ட பணக்காரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி பெரும் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி சற்று முன் வெளியிட்டுள்ள உத்தரவில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எவ்வளவு என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது
இதனை அடுத்து அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் அதானி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கடன் கொடுத்த விவரங்களை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva