ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற அவசரப்பட வேண்டாம்!ஆர்பிஐ கவர்னர் அறிவுறுத்தல்!
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு அவசரப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் இறுதி வரை புழக்கத்தில் இருக்கும் என்றும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற நான்கு மாத காலம் அவகாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் பணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுகின்றோம் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் மீண்டும் எங்களிடம் வந்து விடும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva