1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (13:02 IST)

மணல் மாஃபியா செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் லாரி ஏற்றி கொலை

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மணல் மாஃபியாக்கள் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சந்தீப் சர்மா லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்தியப் பிரதேச மாநிலம் கோத்வாலி பகுதியைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்பவர் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இயற்கை வள சுரண்டல்கள் மற்றும் மணல் கொள்ளை பற்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார்.
 
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக ஆடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டார். இதில் அந்த காவல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சந்தீப் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் சில நாட்களுக்கு புகார் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் நேற்று சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி சந்தீப் சர்மா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சம்பவம் நடந்து பல மணி நேரம் கழித்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 
 
இந்த சம்பவம் தற்போது மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கொளையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்க்ள் என்றும் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.