நீங்கள் பேட்டியே தர வேண்டாம்: ஜிக்னேஷூக்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பத்திரிகையாளர்கள்

Last Modified செவ்வாய், 16 ஜனவரி 2018 (22:26 IST)
குஜராத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஜிக்னேஷ் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். இயக்குனர் ரஞ்சித்துடன் பொங்கல் கொண்டாடிய அவர் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது ஒரு குறிப்பிட்ட ஆங்கில சேனலின் மைக்கும் அவர் முன் இருந்தது. உடனே ஜிக்னேஷ் இந்த சேனலின் மைக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த குறிப்பிட்ட சேனலுக்கு பேட்டி தருவதில்லை என்பது தனது கொள்கை என்றும், உடனே அந்த சேனலின் மைக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் சென்னை பத்திரிகையாளர் சங்கம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நீங்கள் பேட்டி தராவிட்டாலும் பரவாயில்லை, அவ்வாறு ஒரு குறிப்ப்ட்ட சேனலின் மைக்கை மட்டும் எடுக்க முடியாது என்று கூறினர். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பே ரத்தானது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜிக்னேஷ் டெல்லியில் நடந்த ஒரு பேட்டியின்போது இதேபோல் அந்த குறிப்பிட்ட சேனலின் மைக்கை எடுக்க சொன்னார். அப்போது அந்த மைக் எடுக்கப்பட்டது. ஆனால் சென்னையில் அதுமாதிரி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :