செய்தியாளர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள்: திடீர் பல்டி அடித்த அமைச்சர்

Last Updated: சனி, 17 மார்ச் 2018 (09:57 IST)

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்களும், நெட்டிசன்களும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் ரொம்ப அழகாயிருக்கீங்க. நீங்கள் அணிந்துள்ள கண்ணாடி ரொம்ப அழகாக உள்ளது' என்று ஒரு பெண் பத்திரிகையாளரை விமர்சனம் செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர, சகோதரியாகவே நான் பார்க்கிறேன். அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்ததை பத்திரிகையாளர்கள் இதனை ஏற்று கொண்டனர். ஆனால் நெட்டிசன்கள் இன்னும் விடாமல் மீம்ஸ் போட்டு கொண்டிருப்பதால் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் இன்னும் டிரெண்ட்ங்கில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :