புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (01:57 IST)

மம்தா பானர்ஜி கலந்து கொண்ட விருந்தில் ஸ்பூனை திருடிய பத்திரிகையாளர்கள்: காட்டிக் கொடுத்த சிசிடிவி

சமீபத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி லண்டனுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது அங்குள்ள ஒரு ஹோட்டலில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் இந்திய பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். ஆடம்பரமாக நடந்த இந்த விருந்தில் ஒருசில பத்திரிகையாளர்கள் ஸ்பூன் உள்ளிட்ட ஒருசில பொருட்களை யாருக்கும் தெரியாமல் தங்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து  வைத்துள்ளனர்.

இதனை சிசிடிவி கேமிரா மூலம் கண்டுகொண்ட ஹோட்டல் அதிகாரிகள் விருந்து முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை மட்டுமே தனியே அழைத்து ஒளித்து வைத்திருந்த ஸ்பூனை கொடுத்துவிடும்படி கூறியுள்ளனர். முதலில் மறுத்த அந்த பத்திரிகையாளர்கள் பின்னர் சிசிடிவி மூலம் தாங்கள் கண்காணிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி ஸ்பூன்களை கொடுத்துவிட்டு வெளியேறியுள்ளனர். நாகரீகம் கருதி ஹோட்டல் நிர்வாகிகள் தனியாக இதை செய்திருந்தாலும் எப்படியோ இந்த தகவல் பரவிவிட்டதாக கூறப்படுகிறது.