ராகுல் காந்தியை பிரதமராக்க பெருகி வரும் ஆதரவு!!!
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றாடம் பொதுக்கூட்டங்களில் பங்குபெற்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியை ஒழித்து, ராகுல் காந்தியை பிரதமராக்குவேன் என கூறினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என ஸ்டாலின் கூறியது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த்யது. இதைத்தொடர்ந்து கர்நாடக முதலமைச்சரும் ஜனதா தளம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறது என கூறினார்.
இந்நிலையில் இன்று பீகாரில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் கலந்துகொண்டு பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேஜஸ்வி யாதவ் பாஜக நாடு முழுக்க கலவரத்தை கொண்டு வர பார்க்கிறது. இவர்களை அடக்க ராகுல் காந்தி தான் சரியானவர். எங்களது கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என கூறினார்.
தொடர்ந்து காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் வலு சேர்ந்துகொண்டே வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.