புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (17:35 IST)

சிபிஐ புதிய இயக்குனர் யார்? பிரதமர் தலைமையிலான குழு அறிவிப்பு

கடந்த ஒரு மாதமாக சிபிஐ இயக்குனர் பதவியை பிரதமர் தலைமையிலான குழுவும், நீதிமன்றமும் பந்தாடி வந்த நிலையில் சிபிஐக்கு புதிய இயக்குனர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷி கே.சுக்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் தலைமையிலான குழு அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிஷி கே.சுக்லா மத்திய பிரதேசத்தில் டிஜிபி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அமைப்பிற்கு புதிய நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டதால் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனர் பொறுப்பிலிருந்து நாகேஷ்வர் ராவ் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது