செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (15:13 IST)

#சனிக்கிழமைபிரதமர் டிவிட்டரில் டிரெண்டிங்: ஸ்டாலினை வைத்து மரண கலாய் மீம்ஸ்..

டிவிட்டரில் #சனிக்கிழமைபிரதமர் என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதி தெரிவிந்துக்கொள்ளுங்கள்...
 
கடந்த சில தினகங்களுக்கு முன்னர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் 6 நாட்களில் 6 பிரதமர்கள் பதவி ஏற்பார்கள். அதாவது திங்கட்கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை தேவகவுடாவும், வெள்ளிக்கிழமை சந்திரசேகரராவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கு விடுமுறை விடப்படும் என்று கூறியிருந்தார், 
 
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால், இன்று ஸ்டாலினை கேலி செய்து #சனிக்கிழமைபிரதமர் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்ரனர். இதில் கமெண்டுக்கள் மூலமும், மீம், வீடியோ மீம் ஆகிவற்றின் மூலமும் ஸ்டாலின் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.