செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:23 IST)

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை!

ramar temple
ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.



அயோத்தியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதியன்று கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி உத்தர பிரதேசத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேசத்தில் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உத்தர பிரதேசத்தை தொடர்ந்து பாஜக ஆளும் சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களிலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மதுக்கடைகள் ஜனவரி 22 அன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K