வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (16:48 IST)

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் நேரடியாக இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம்!

singapore pay now- india upi
இனிமேல் சிங்கப்பூர் நாட்டில் இருந்து இந்தியர்கள்     நேரடியாகவே இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரில் PayNow இடையிலான எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், ‘’சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் இப்போது நேரடியாக இந்தியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம்’’ என்று அறிவித்துள்ளது.

இதன் தொடக்கமாக BHIM, Paytm மற்று  Phonepe செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கும், Axis bank, DBS India, ICICI,  இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, எஸ்.பி.ஐ ஆகிய வங்கிகளின் பயனர்களுக்கும் இவ்வசதி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால், இதன் மூலம் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.