வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (07:34 IST)

19 எம்பிக்கள் ராஜ்யசபா தேர்தல்: எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பரவி வரும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் நேற்று 19 இடங்களுக்கான ராஜ்யசபை தேர்தல் நடந்தது என்பது தெரிந்ததே. 
 
24 ராஜ்யசபா எம்பி க்கள் பதவி காலம் முடிந்ததையடுத்து ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக எம்பிக்கள் இரன்ன கடாடி, அசோக் காஸ்தி, அருணாசலப் பிரதேசத்தின் நாமப் ரெபியா ஆகிய ஐவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நேற்று 19 ராஜ்யசபா எம்பிகளை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது 
 
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை முதல் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளன. நேற்று நடைபெற்ற ராஜ்யசபா பதவிக்கான தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் கைப்பற்றி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். மாநில கட்சிகளான என்.பி.பி, எம்.என்.எப். ஆகியவை தலா 1 எம்.பி இடங்களைப் பெற்றுள்ளன.
 
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முக்கியமானவர்களில் பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸின் திக்விஜய்சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரன், காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.