செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (10:12 IST)

ராமர் கோவில் கொண்டாட்டத்தால் முடங்கிய சாலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நீதிபதி

ராமர் கோவில் கொண்டாட்டம் காரணமாக சாலை முடங்கியதை அடுத்து நீதிபதி ஒருவர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் உள்ள ராமர் கோவிலில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது என்பதும், ஊர்வலங்கள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஊர்வலங்களால் ஒரு சில நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தினால் நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை முடக்கப்பட்டது குறித்து தாமாக முன்வந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மேத்தா என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.  
 
ராமர் இலங்கைக்கு பாலம் கட்டினார் என்பது உண்மைதான். ஆனால் அதை மக்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் சாலைகளில் திரளாக கூடி போக்குவரத்தை முடக்குவது முரணாக உள்ளது என்றும் அவர் அதற்கு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran