செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:18 IST)

ராம நவமி நாளில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி: இந்திய வான் இயற்பியல் மையம் செய்த உதவி..!

ramar
அயோத்தியில் நேற்று ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தில் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் மையம் உதவி செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர்  ஜிதேவேந்திர சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் நண்பகல் 12 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் பொட்டு வைப்பது போல  சூரிய ஒளி விழும் வகையில் சூரியனின் பாதை உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியை பெங்களூரு  இந்திய வான் இயற்பியல் மையம் செய்துள்ளது.
 
இதற்காக ராமர் கோயிலின் 3வது மாடியில் கியர்பாக்ஸ் மற்றும் உயர்தரமான ஆப்டிகல் லென்ஸ் பொருத்தப்படும் என்றும், அதன்பின் பித்தளையால் ஆன குழாய் தரைதளத்தில் உள்ள கருவறை வரை பொருத்தப்பட்டு, அந்த லென்ஸில் படும் சூரிய ஒளி ராமர் சிலையின் நெற்றியில் படும் வகையில் அமைக்கப்படும் என்றும், இதற்கு மின்சாரம், பேட்டரி, இரும்பு உள்ளிட்ட எதுவும் தேவையில்லை என்றும் அடுத்த 19 ஆண்டுக்கு இது செயல்படும் என்றும் அமைச்சர்  ஜிதேவேந்திர சிங் தெரிவித்துள்ளார்,.
 
Edited by Siva