1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (18:31 IST)

ராமர் கோவில் திறப்பு அரசியல் நிகழ்வா? ஆன்மீக நிகழ்வா? ரஜினிகாந்த் விளக்கம்..!

நேற்று நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில் இது ஒரு அரசியல் நிகழ்வா? அல்லது ஆன்மீக நிகழ்வா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.  
 
ராமர் கோவில் திறப்பு என்பது என்னை பொருத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல என்றும் ஆன்மீக நிகழ்வுதான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோயில் திறந்தவுடன் நேரில் பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவர் என்பதில் எனக்கு உண்மையில் மிகப்பெரிய சந்தோசம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ராமர் கோவில் விவகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் என்றும் எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் ராமர் கோவில் விவகாரத்தில் ரஜினியின் கருத்துக்கு என்னிடம் விமர்சனம் உள்ளது என்று கூறிய நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் ரஜினிகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva