வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:39 IST)

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய தடை! – ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு!

உலக நாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்றாலும் தனது ராணுவ ஆயுதங்களுக்கு உலக நாடுகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பல ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிடம் வாங்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராணுவ தளவாடங்களுக்காக வெளி நாடுகளுக்கு அதிக அளவில் செலவு செய்வதை குறைக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, உலக நாடுகளிடமிருந்து வாங்கப்படும் 101 ஆயுத தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், ரேடார் விமானங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 101 பொருட்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் 2020 - 2024ம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.