திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:58 IST)

உலகத்திலேயே ரிலையன்ஸ்க்கு இரண்டாவது இடம்! – ப்ராண்ட் ஃப்யூச்சர் வெளியீடு!

உலகத்தின் மிக சிறந்த ப்ராண்டுகளுக்கான 2020ம் ஆண்டின் பட்டியலில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

உலகளவில் உள்ள மிக சிறந்த ப்ராண்டுகள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் ப்ராண்ட் ஃப்யூச்சர் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகளவில் உள்ள பெரும் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி, புதிய பொருட்களை அறிமுகம் செய்தல், பங்குகளின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு உலக அளவில் ப்ராண்ட் என்னும் தகுதியை பெற்றுள்ள நிறுவனங்களின் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் சிறந்த ப்ராண்ட் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து என்விடியா, மௌட்டாய், நைக் மற்றும் மைக்ரோசாப்ஃட் போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.