இந்திய பொருளாதாரம் உயர தொடங்கியுள்ளது! – ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்!
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்த நிலையில் தற்போது பொருளாதாரம் உயர தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதலாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தொழில்கள் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு விதிகளில் தொழில்வளர்ச்சிக்காக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரிசர் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் ”இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் – மே மாதம் முதலாக உயரத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஊரக பொருளாதார வளர்ச்சி விரைவில் வலிமையாக உருவெடுக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் உலக அளவிலேயே பொருளாதார மந்தநிலை நிலவி வருவதாக கூறியுள்ள அவர் இந்தியா விரைவில் பொருளாதார வளர்ச்சியை அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.