புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்… ரயில்வே துறைக்கு 94 சதவீதம் வருவாய் சரிவு!

ரயில்வே துறை ரயில் நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தியது.

கொரோனா கால ஊரடங்குக்கு முன்பாகவே ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்டத்தை குறைப்பதறகாக நடைமேடைக் கட்டண டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியும் என்ற சூழல் உருவானது. பின்னர் 10 ரூபாய் இருந்த டிக்கெட் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த நிதி ஆண்டில் பிளாட்பார்ம் டிக்கெட்கள் மூலமாக வரும் வருவாயில் 94 சதவீதம் குறைந்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.