மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி: தமிழக அரசு தரப்பில் உறுதி!

TN assembly
மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி: தமிழக அரசு தரப்பில் உறுதி!
mahendran| Last Modified திங்கள், 14 ஜூன் 2021 (20:02 IST)
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உறுதி என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டது என்பதும் இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 நாளை முதல் வழங்கப்பட உள்ளது என்பதும் இதற்கான டோக்கன் வினியோகம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நலவாரியத்தில் 31ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர் நிவாரண நிதி வழங்க கோரிய மனுவை பரிசீலிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் மேலும் படிக்கவும் :