ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல் காந்தி திடீர் பயணம்.. என்ன காரணம்?
செப்டம்பர் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து நாட்கள் பயணமாக ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதாகவும் முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள ஐரோப்பிய ஆணைய எம்பிக்களை சந்தித்து பேசுவதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் ராகுல் காந்தி அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாட இருப்பதாகவும் பிரான்ஸ் தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
அதன் பின்னர் நார்வே நாட்டிற்கு செல்லும் ராகுல் காந்தி அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்க இருப்பதாகவும் அதன் பிறகு அவர் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva