என் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு நன்றி! – ராகுல் காந்தி ட்வீட்!
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு காவலை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் தன்னை பாதுகாத்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
ராஜீவ் காந்தி வெடிக்குண்டு தாக்குதலில் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதப்பட்டது. அவரது குடும்பத்தினரை காக்கும் பொருட்டு எஸ்.பி.ஜி எனப்படும் ஸ்பெஷல் பேட்ரால் குரூப் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் இன்று வரை எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது. அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்பதால் திரும்ப பெற்றுக்கொண்டதாக தெரிவித்தாலும் காங்கிரஸ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி “இத்தனை ஆண்டுகளாக சோர்வுறாமல் என்னையும், எனது குடும்பத்தையும் பாதுகாத்த எஸ்.பி.ஜி சகோதர, சகோதரிகளுக்கு மிகப்பெரும் நன்றி. உங்கள் உடனான பயணங்கள் பாதுகாப்பு மிக்கவையாகவும், கற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது.” என்று கூறியுள்ளார்.