செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:19 IST)

இரண்டே நிமிடத்தில் 60 லட்சம் பரிசு – ஜாக்பாட் அடித்த பெண்!

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு இரண்டு நிமிடத்தில் 60 லட்சம் பரிசு கிடைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் லேகா. இவரது கணவர் பிரகாஷ் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்தில் பிரகாஷ் கால்கள் அடிபட்டதால் அவர் வேலை செய்ய முடியாமல் போனது. லேகா அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்று பிழைத்து வந்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து அதில் லாபம் ஈட்ட முடியாததால் லாட்டரி விற்பனையை கைவிட்டுள்ளார். லேகாவுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களை வளர்க்கவே சிரமப்பட்டு வரும் லேகா நேற்று முன்தினம் ஒரு லாட்டரி கடையில் 12 கேரள அரசு லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அவர் லாட்டரி சீட்டுகள் வாங்கி இரண்டு நிமிடம் கழித்து அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

அதில் லேகா வாங்கியா லாட்டரி சீட்டு ஒன்றுக்கு முதல் பரிசான 60 லட்சம் விழுந்துள்ளது. இரண்டே நிமிடங்களில் லேகா லட்சாதிபதியானது அந்த பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணத்தை வைத்து தங்களுக்கென சொந்தமாக சிறிய வீடு கட்டிக்கொள்ள இருப்பதாகவும், குழந்தைகளின் படிப்புக்கு மீத தொகையை செலவளிக்க இருப்பதாகவும் லேகா தெரிவித்துள்ளார்.