வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (15:42 IST)

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Modi Rahul
மேற்கு வங்கத்தில் இன்று நடந்த ரயில் விபத்துக்கும் இதற்கு முன் நிகழ்ந்த ரயில் விபத்துக்கும் மோடி அரசின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
மேற்குவங்க மாநிலத்தில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் 15 பேர் பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்துக்கு சிக்னலை டிரைவர் மதிக்காமல் சென்றது தான் காரணம் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த ரயில் விபத்துக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் காட்டியுள்ளார். மேற்குவங்க ரயில் விபத்தில் பலர் உயிர் இழந்திருப்பது தனக்கு மிகவும் கவலை அளிக்கிறது என்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துக்கள் மோடி அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கும் அலட்சியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்றும் பொறுப்பான எதிர்கட்சியாக இந்த அலட்சிய போக்கை தொடர்ந்து கேள்வி எழுப்பி மோடி அரசை ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்க வைப்போம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva