வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2025 (09:33 IST)

வீட்டிலேயே 9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பம்! கலைக்க சொல்லி போராடும் சுகாதாரத்துறை ஊழியர்கள்!

Child Murder

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான கூலித்தொழிலாளி கோபி. இவரது மனைவி சங்கீதா (35). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமான நிலையில், இதுவரை 9 முறை கர்ப்பம் தரித்துள்ளார் சங்கீதா. 9 முறையும் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பெற்றுள்ளார்.

இதில் ஒரு குழந்தை மட்டும் சில நாட்களில் இறந்துள்ளது. மற்றொரு குழந்தையை உறவினர் ஒருவருக்கு தத்துக் கொடுத்துள்ளனர். மற்ற 7 குழந்தைகளை இந்த தம்பதியினர் வளர்த்து வருகின்றனர். இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது சங்கீதாவின் உடல்நிலையை மோசமாக்கலாம் என சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
 

 

ஆனாலும் தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் சங்கீதா. அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்வது உடல்நிலையையும், குடும்ப சூழலையும் மோசமாக்கும் என உறவினர்களும், மருத்துவ ஊழியர்களும் சங்கீதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் கருவை கலைக்க அவர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற நிலையில் திடீரென மனம் மாறி கருவை கலைக்க மறுத்துள்ளார்.

 

இதுகுறித்து மல்லசமுத்திரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்ததின் பேரில் போலீஸார் வந்து சங்கீதாவை சந்தித்து பேசி கருவை கலைக்க அவரை ஆம்புலன்ஸ் மூலமாக நாமக்கல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சங்கீதா கருவை கலைக்க மறுத்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K