பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?
பிரதமர் மோடி ஜூன் இருபதாம் தேதி தமிழக வர இருந்ததாகவும் சென்னையில் இருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்காக பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பான பேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் மற்றும் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் திட்டமிட்டபடி தொடங்கப்படுமா அல்லது இந்த ரயில் தொடங்கும் தேதியும் தள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran