1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (08:09 IST)

எனக்கு வரப்போகும் மணப்பெண் எப்படி இருக்க வேண்டும்: ராகுல் காந்தி

Rahul
எனக்கு வரப்போகும் மணப்பெண் எப்படி இருக்க வேண்டும் என ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராகுல் காந்திக்கு தற்போது52 வயது ஆகி வரும் நிலையில் அவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் விரைவில் ராகுல் காந்திக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் பெண் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு வரப்போகும் மணப்பெண் தன்னுடைய பாட்டி இந்திரா காந்தி மற்றும் தன்னுடைய தாயார் சோனியா காந்தி ஆகிய இருவரின் கலவையாக கொண்ட குணமாக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
மேலும் தனது பாட்டியை தான் இரண்டாவது தாயாக கருதி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனேகமாக 2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்திக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva