திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:34 IST)

இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக செல்கிறார் ராகுல் காந்தி: ஒற்றுமை பயணம் குறித்து குஷ்பு!

kushboo
இல்லாத ஊருக்கு வழி தேடுவது போல் இல்லாத கட்சிக்காக ஒற்றுமைப் பயணம் செல்கிறார் ராகுல் காந்தி என நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமான குஷ்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 மக்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கு என்ன? நமக்கு அரசியல்தான் முக்கியம் என்ற எண்ணம் தான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்
 
இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல இல்லாத கட்சிக்காக ராகுல்காந்தி பயணம் செய்கிறார் என்றும் இந்த பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறி உள்ளார்.
 
நடை பயணத்தின் முடிவில் ராகுல்காந்திக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப் போகிறது என்றும் ராகுல் காந்தி சென்றதுமே அவரை மறந்து விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva