பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து!
பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள பிரதமர் மோடியின் தாயாரின் உடல்நிலை சரி இல்லாததால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது என்றும் விலை மதிப்பற்றது என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மோடியின் தாயார் விரைவில் குணமடைய காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran