என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் பயப்படப் போவதில்லை: ராகுல் காந்தி
என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் நாங்கள் பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து பாஜக அரசை எதிர்த்து கொண்டிருப்பது தான் எங்கள் பணி என்றும் ராகுல் காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இதனையடுத்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வீடுகளில் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் இருவரும் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இதனை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் நாங்கள் பயப்பட போவதில்லை என்றும் பாஜக அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது