புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 மே 2020 (14:45 IST)

நிவாரண தொகுப்பு மக்களை சென்றைடைய வேண்டும்! – பிரதமருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!

இந்தியாவில் கொரோனா பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அது நேரடியாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்திய மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினை நிகர் செய்யும் பொருட்டு மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி “பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் மக்களை நேரடியாக சென்று சேரும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும். ஏழை மக்களுக்கு இப்போது பணம் அத்தியாவசிய தேவையாக உள்ளது. நேரடி வங்கி பரிமாற்றம், ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை 200 நாட்களாக மாற்றுதல், விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவது போன்றவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள்தான் நம் எதிர்காலம்” என கூறியுள்ளார்.