ராகுல் காந்தியை 75 நிமிடங்கள் காக்க வைத்தாரா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்?
ஜார்க்கண்டில் நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹெலிகாப்டரில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் புறப்படும் அனுமதியை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தை மேற்கொள்ள, கோடா பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல தயாராக இருந்த ராகுல் காந்தி, 75 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இந்த தாமதம் அவரது பயணத்திலும், வேலைகளிலும் அசவுகரியத்தை உருவாக்கியது.
அதனைத் தொடர்ந்து, நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, ஹெலிகாப்டர் புறப்படும் அனுமதி வழங்கப்பட்டது.
"மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது என்பதை காங்கிரஸ் கட்சி கடும் வேதனையுடன் கண்டித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
Edited by Mahendran