வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (14:21 IST)

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்றும் மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், அவருக்கு ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்றுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், வயநாடு சுல்தான் பத்தேரி என்ற பகுதியில் வாகன பேரணியில் பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி ஈடுபட்டார்.

நீண்ட காலமாக வயநாடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த நிலையில், தற்போது அது காங்கிரஸ் போட்டியாக மாறி வருகிறது என்றும், எனவே ராகுல் காந்தியை அடுத்த பிரியங்கா காந்தியும் இந்த தொகுதியில் மிக எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார் என்பதும், அதேபோல் இடது கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மொகரி என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran