வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:38 IST)

ராகுல் காந்தி குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: பிரதமா் மோடி குற்றச்சாட்டு..!

Modi Rahul
ராகுல் காந்தி மட்டுமல்ல, அவரது குடும்பமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு அவர் தேர்தல் பிரச்சாரமாக காணொளி மூலம் பேசினார்.

அப்போது, ராகுல் காந்தி மட்டுமின்றி அவரது மூதாதையர்களான ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி உள்பட அனைவரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்றும், 1990களுக்கு பின்னர் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர் என அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தான் இட ஒதுக்கீடு பரவலாகப்பட்டது என்றும், இட ஒதுக்கீட்டின் மூலம் தலித் மக்கள் பல நன்மைகளை பெற்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்ற பாஜக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Edited by Mahendran