வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:09 IST)

ராகுல் காந்தி பொய் சொல்கிறார்; தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக..!

Rahul Gandhi
மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பொய் சொல்கிறார் என தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியை புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி போய் கூறி வருவதாகவும், ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் அவரது பேச்சு இருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறி பொய்களை பரப்பி வருகிறார். மகாராஷ்டிரா மற்றும் மற்ற மாநிலங்கள் இடையே விரோதத்தை வளர்த்து, இந்திய ஒன்றியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். தேர்தல் வெற்றிக்காக பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சியை வேறு மாநிலத்திற்கு திருப்ப பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran