1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

25 ஆயிரம் பேர்களுக்கு அரசு வேலை: முதல்வர் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்து!

சமீபத்தில் பஞ்சாப் மாநில மாநில முதல்வராக பதவியேற்ற பகவந்த்சிங் மான் தனது முதல் கையெழுத்தாக 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 25000  இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்குவதற்கான ஆணையில் முதலமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். இது போன்ற ஆக்கபூர்வமான திட்டத்தில் முதல் கையெழுத்தாக முதல்வர் கையெழுத்திட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது