1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 19 மார்ச் 2022 (16:16 IST)

மண்ணைக் காக்கும் பட்ஜெட் - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் நாடு முதல்வரும் திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின் இந்தப் பட்ஜெட்டை  மண்ணைக் காக்கும்  பட்ஜெட் எனப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் நாடு வேளாண் நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது எனப் பாராட்டியுள்ளார்.

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்படி ஒன்றே இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது  குறிப்பிடத்தக்கது.