செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (19:26 IST)

9 சிறுமிகளை பலாத்காரம் செய்த கிரிமினல் இளைஞர் கைது...

டெல்லியில் கடந்த வருடத்தில் மட்டும்  மூன்று முதல் ஏழு வயதுடைய   சிறுமிகள் காணாமல் போவதும், பாலாத்காரம் செய்யப்படுவதும், காலொடிந்த நிலையில் அந்த சிறுமிகள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நவம்பர் 11 ஆம் தேதி மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக சுனில் குமார் என்ற 20 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர் .
 
அவனிடம் போலிஸார் விசாரித்த போது அவன் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அவன் இதுவரை 9 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யும் முன் அவர்களின் கால்களை உடைத்து அதன் பின் பலாத்காரம் செய்தபின் கடுமையாகத்தாக்கி கொலை செய்துள்ளான். இதை அவனே ஒப்புக்கொண்டுள்ளான்.
 
மேலும் சுனில்குமார் வேலை இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்துள்ளான். அதனால் சிறுமிகளை தேடிகொண்டு அவர்களில் மூன்று வயது முதல் 7 வயதுடைய குழந்தைகளை குறிவைத்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளான் சுனில் குமார்.
 
உணவுக்காக கோயில்களுக்கு சென்றுன் அவனிடைய வகுப்பு ரீதியாக உள்ளவர்கள் நடத்துகிற இடத்தில் சாப்பிட்டு இந்த குற்றத்தை அரங்கெற்றி வந்திருக்கிறான். தற்போது அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.