1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vice-Speaker Thambidurai is arguing with the youth

துணை சபாநாயகர் தம்பிதுரை இளைஞரிடம் வாக்குவாதம்

ViceSpeaker
சட்டசபை  துணை சபாநாயகர் தம்பிதுறை இன்று கரூரை அடுத்த தாளியாபட்டி கிராமத்துக்கு சென்றார். அவருக்கு சால்வை போர்த்தி மக்கள் மரியாதை அளித்தனர்.அப்போது அங்கு கூட்டத்தில் நின்றிருந்த ஒரு இளைஞர் நாலு வருஷம் கழித்து இப்பத்தான் தொகுதி பக்கம் வருகிறீர்களா..? என தன் ஓட்டுப்போட்ட உரிமைக்காக வெற்றி பெற்ற வேட்பாளர் தம்பிதுறையிடம் கேட்டுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத தம்பிதுறை  உடனே அந்த இளைஞனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
அப்போது தம்பிதுறை கூறியதாவது:
 
எனக்கு மொத்தம் முப்பதாயிரம் கிராமம் இருக்கு. நீ இப்படி பேசறது தப்பு பா... . தொகுதிக்கு வரலீணு சொல்றது ஃபேசனா போச்சு. நான் ஒரு நாளைக்கு 50 தொகுதிக்கு போகிறேன் .நான் தொகுதிக்கு வர்றப்ப நீ இல்லாம போனதுக்கு நான் என்ன பண்ணறது... இப்படியெல்லம் நீ பேசக்கூடாது. எனக்கு இந்த வார்த்தைகள் கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..இவ்வாறு அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
1 1/2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு : ஆடிப்போன அமேசான் ஓனர்...