புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:09 IST)

இந்தியாவிலிருந்து ஆற்றுநீர் கூட பாகிஸ்தானுக்கு போகாது! – பிரதமர் மோடி வைக்கும் அடுத்த செக்!

இந்தியாவிலிருக்கும் ஆறுகளில் இருந்து இனிமேலும் பாகிஸ்தானோடு நீரை பங்கிட்டுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றார் பிரதமர் மோடி. அப்போது மக்களிடையே பேசிய அவர் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது போல, சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் பாஜகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார்.

இந்த ஆண்டில் ஹரியானாவில் இரண்டு தீபாவளிகள் கொண்டாட இருப்பதாகவும், அதில் இரண்டாவது தீபாவளி பாஜகவின் வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் நதிகளை பாகிஸ்தானோடு பங்கிட்டு வருவதாகவும், இனிமேல் அவை முழுக்க ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் விவசாய நலன்களுக்காக பயன்படுத்தும் வகையில் திருப்பி விடப்படும் எனவும் கூறியுள்ளார்.

சிந்து நதியை மூலமாக கொண்ட 5 ஆறுகளையும் சேர்த்து மொத்தம் உள்ள ஆறுகளில் மூன்று பாகிஸ்தான் தேவைக்கும், மூன்று இந்தியாவின் தேவைக்கும் ஒதுக்கப்படுவதாக 1960ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறும் எண்ணத்தில் பாஜக இருப்பது இருநாடுகளுக்கிடையேயான சிக்கலை மேலும் வலுவாக்கக்கூடும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.