புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:33 IST)

பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? பிரசாந்த் கிஷோர் சொல்வது என்ன?

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா, அந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்கள் வெல்லும் என்று ஒரு சில ஊடகங்கள் கருத்துக்கணிப்பை தெரிவித்திருந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் இது குறித்து கூறிய போது 370 தொகுதிகள் வெல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்
 
பாஜகவை பொறுத்தவரை வட மாநிலங்களில் ஏற்கனவே செல்வாக்கு உள்ளது என்றும் இந்த முறை தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் ஓரளவு பாஜக வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டி விடும் என்றும் பாஜகவுக்கு மூன்று முதல் ஐந்து தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

தேசிய அளவில் 300க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக தனித்து கைப்பற்றும் என்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 350 தொகுதி வரை அந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் மொத்தத்தில் பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் அவர் கூறினார்

இந்தியா கூட்டணி அதிகபட்சமாக தேசிய அளவில் 100 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்றும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி அல்லாத கட்சிகளும் ஒரு சில இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Siva