திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:42 IST)

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெல்லுமா? மாற்றி எழுதுகிறதா ஊடகங்கள்?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தாலும் பல ஊடகங்கள் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவுக்கு குறைவான தொகுதிகள் தான் கிடைக்கும் என்று எழுதி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் தான் 404 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது, இந்திரா காந்தி கூட அவ்வளவு அதிகமான தொகுதிகளை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று கருத்துக்கள் இருந்தாலும் ஊடகங்கள் இந்த விஷயத்தில் நெகட்டிவ் ஆக எழுதி வருவதாக கூறப்படுகிறது

மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் முழுமையாக பாஜக வெல்லும் என்றும் தென் மாநிலங்களிலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நல்ல வெற்றி பெறும் என்றுதான் கூறப்பட்டு வருகிறது

தமிழ்நாடு கேரளா ஆகிய தொகுதிகள் ஆகிய மாநிலங்களில் சிறிய அளவில் வெல்லும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அளிக்கும் பேட்டியில் பாஜகவுக்கு கடந்த முறையை விட இந்த முறை குறைவாக தான் தொகுதி கிடைக்கும் என்றும் குறிப்பாக 200 முறை 220 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

ஒரு பக்கம் பாஜக 370 தொகுதிகள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஊடகங்கள் மிகக் குறைந்த தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணித்து வருகின்றன. உண்மை எது என்று ஜூன் நான்காம் தேதி தெரிந்துவிடும்..

Edited by Siva