1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:26 IST)

இந்தியன் 2 படத்துக்கு முன்பாக ரி ரிலீஸாகவுள்ள கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் திரைப்படம்?

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ராஜ்ய சபா எம் பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் 13 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதற்கு முன்பாக கமல்ஹாசனின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘விக்ரம்’ ஜூன் 3 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதிதான் ரிலீஸ் ஆனது. அதன் இரண்டாம் வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் ரி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.