பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு ரோட் ஷோ-வில் பிரச்சாரம்!
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று இரவு விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.
சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கரூரில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து திருச்சி பாஜக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ரோட் ஷோ வில் கலந்து கொண்டார்.
உறையூர் சாலை ரோடு கண்ணப்பா ஹோட்டல் அருகே தொடங்கி நாச்சியார் கோவில் வரை அந்த ரோடு ஷோ நடைபெற்றது.
காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை பாஜகவினர் ரோட் ஷோ நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர் ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை அதற்கு அனுமதி மறுத்தது அதன் காரணமாக அவர்கள் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்தனர்.
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாற்று இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினார் அதன்படி சாலை ரோடு பகுதியில் ரோடு ஷோவானது நடைபெற்றது.
இந்த ரோடு ஷோவிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ரோடு ஷோ முடிவில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் நிற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.