1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 மே 2019 (08:13 IST)

விடிய விடிய தியானம் செய்த பிரதமர் மோடி! சற்றுமுன் கிளம்பியது எங்கே?

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று கேதாரிநாத் சென்று புனித குகையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நேற்று இரவு முழுவதும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய தியானம் செய்தார்.
 
இதனையடுத்து இன்று காலை தியானத்தில் இருந்து எழுந்த பிரதமர் மோடி சற்றுமுன் பத்ரிநாத் கிளம்பினார். பத்ரினாத்தில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி இன்று மாலை டெல்லி கிளம்புவார் என தெரிகிறது.
 
இன்றுடன் அனைத்து கட்ட தேர்தலும் முடிவடைவதால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அனேகமாக 25ஆம் தேதிக்குள் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிடும். இம்மாத இறுதிக்குள் புதிய அரசு பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேதாரிநாத், பத்ரினாத் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி, மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பாரா? அல்லது இந்த மாதத்துடன் அவருடைய பிரதமர் பதவி முடிவுக்கு வருமா? என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும். பிரதமரின் ஆன்மீக பயணம் அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்