செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (17:27 IST)

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.. வங்கிகள் பிடித்தம் செய்ததால் முதல்வர் அதிருப்தி..!

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி தொகையை வங்கிகள் கடனுக்காக பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து கேரள முதல்வர் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் தங்களது வீடு உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

ஆனால் உதவி தொகையிலிருந்து வங்கிகள் தங்களுக்கான கடன் தவணைகளை பிடித்தம் செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து முதலமைச்சர் தனது அதிருப்தியை  தெரிவித்துள்ளார்.

கேரள அரசு சார்பில் நிதி உதவி தேவைப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பொது மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த பணத்தில் தான் வங்கிகள் தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகையை உடனடியாக பிடித்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கூரிய நிலையில் வீடு கட்டவும் நகை கடனாகவும் பெற்றிருந்தவர்கள் மாநில அரசின் உதவித்தொகை வந்ததும் பிடித்தம் செய்து கொண்டதாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவரிடம் இருந்து வங்கிகள் தொடர்ந்து மாதாந்திர தவணைகளை வசூலித்து வரும் நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

Edited by Mahendran